கடந்த சில நாட்களாக மொழிகளை கடந்து, தமிழில் திரைப்பட விமர்சனங்களை பதிவிட வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்கான சரியான நேரமும், சந்தர்ப்பமும் அமையாததால் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன். இந்த சூழ்நிலையில் தான் Jathi Ratnalu (ஜாத்தி ரத்னாலு) தெலுங்கு திரைப்படத்தை காண நேர்ந்தது. இதற்கு முன் நவீன் பாலிஷெட்டி எனும் வளர்ந்து வரும் நடிகர், நடித்த Agent Sai Srinivasa Athreya (தெலுங்கு) மற்றும் Chhichhore (ஹிந்தி) ஆகிய திரைப்படங்களை Lockdown இல் OTT தளங்களில் கண்டிருந்தேன். இந்த இரண்டு திரைப்படங்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. நவீன் பாலிஷெட்டி ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர் நடித்த திரைப்படம் என்பதாலும், Trailer மிகவும் Fun ஆக இருந்ததாலும், கூடுதல் உந்துதலுடன் படம் பார்க்க சென்றேன். இயக்குனர் அனுதீப்பின் இந்த மூர்க்கத்தனமான காமிக் சவாரியில் நவீன் பாலிஷெட்டி உண்மையிலேயே பிரகாசிக்கிறார்.
Plot
சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிபேட்டில் நம்பிக்கையற்ற மூன்று இளைஞர்களின் பின்னடைவான வாழ்க்கையை இயக்குனர் அனுதீப் நமக்குக் காட்டுகிறார். ஸ்ரீகாந்த் (நவீன் பாலிஷெட்டி) எனும் இளைஞன் ‘லேடிஸ் எம்போரியம் ஸ்ரீகாந்த்’ என்று அழைக்கப்படுவதில் வெட்கப்படுகிறான். லேடிஸ் எம்போரியம், அவனது தந்தை (தனிகெல்லா பரணி) தனது மகனான ஸ்ரீகாந்தின் பெயரில் நிறுவிய கடை. ஆனால் ஸ்ரீகாந்த், தான் 'சைபராபாத் ஸ்ரீகாந்தாக' இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு White Collar வேலையை விரும்புகிறான். அவன் 'ஒரு நல்ல மரியாதைக்குரிய வேலையைத் தேடிக்கொள்வேன்' என்று கூறி ஹைதராபாத்துக்குச் செல்வதாக தனது தந்தையிடம் சவால் விட்டு, ஒரு Canary Yellow Maruti 800 காரில் அவனுடைய பால்ய நண்பர்களுடன் கிளம்புகிறான். சேகர் (பிரியதர்ஷி), பிரஷர் குக்கர் விசில் உடன் ஒரு இணைபுரியா தொடர்பு வைத்திருக்கிறான். மேலும் சமைத்த அரிசியை விட வேறு எதுவும் அவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மேலும் ரவி (ராகுல் ராமகிருஷ்ணா) பெரும்பாலும் எதிலும் பிணைப்பில்லாதவனாகும், காதலில் துரதிர்ஷ்டசாலியாகவும் இருக்கிறான். இந்த மூவரின் சாகசங்கள், ஒரு படுக்கை மற்றும் ஒரு பெரிய வைக்கோல் கூடை (அதில் என்ன இருக்கிறது என்று நாமே Guess செய்த்துக்கொள்ள வேண்டும்) பொருத்தப்பட்ட காரை ஹைதராபாத்திற்கு செலுத்தும் தருணத்தில் கதை தொடங்குகிறது. திட்டமிட்டபடி எதுவும் செல்லவில்லை. விரைவில், இயக்குனர் அனுதீப் பொருத்தமற்ற கதாபாத்திரங்களை மிகுதியாக புகுத்திக்கொண்டே போகிறார். கதையில் நாம் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் விரும்புகிறார். ஜோகிபேட் இளைஞர்கள் பணக்காரர்கள் வாழும் ஒரு குடியிருப்பில் தங்குமிடம் காண்கிறார்கள். இல்லை, கதை வீட்டு NRI உரிமையாளர், அவர்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றியது அல்ல. ஸ்ரீகாந்த் தனது அண்டை வீட்டுப்பெண்ணான சிட்டியை (புதுமுகம் ஃபரியா அப்துல்லா) காதலிக்கிறான். இந்த கதை, ஒரு ஜோகிபெட் பையன், Broken English இல் பேசுவது மற்றும் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தலாம். இந்த One Line ஐ கொண்ட திரைப்படமும் அல்ல. மாறாக, அரசியல்வாதி சாணக்யா (முரளி சர்மா) சம்பந்தப்பட்ட குற்றத்தில் மூவரும் சிக்கிக் கொள்ளும் வரை இப்படம் ஒரு மகிழ்ச்சியான பயணம்.
Analysis
டீஸர் மற்றும் டிரெய்லர் வைரலாகி பார்வையாளர்களை எதிப்பார்ப்பிற்கு உள்ளாக்கும் திரைப்படங்கள், எப்போதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டவசமாக, 'ஜாத்தி ரத்னாலு' பெரிய அளவிற்கு வேடிக்கையானதாகவும் வித்யாசமானதாகவும் பின்னப்பட்டுள்ளது. இப்படம், Pop Culture மற்றும் Mainstream Media வில் உள்ள ஞானம் (அல்லது அதன் பற்றாக்குறை) பற்றிய வர்ணனை. எந்தவொரு படமும் வெற்றிபெற, தர்க்கரீதியான கதைசொல்லல் அவசியம். ஜாதி ரத்னாலு, இந்த விதிக்கு விதிவிலக்கு. உரையாடல்கள் அவற்றின் நோக்கத்திலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை. நடைமுறையில் ஒவ்வொரு வசனமும் சிரிப்பிற்கு வழிவகுக்கிறது. படம் மிகவும் Fun ஆக உள்ளது. ராதனின் இசை, பிரம்மநந்தம் மற்றும் வென்னெலா கிஷோர் ஆகியோரின் Cameos, ஹாங்காங் நூடுல்ஸுக்கு சுவையை சேர்க்கின்றன. ஏன் ஹாங்காங் நூடுல்ஸ்? அதற்கான பதில் படத்தில் உள்ளது. வசனங்கள் அனைத்தும் இப்படத்தின் மிகப்பெரிய Asset கள் ஆகும். ஏனென்றால் Funny Punch Lines மற்றும் Satirical Quotes இந்த படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன. Situational Comedy யினால் படம் நிரப்பப்பட்டிருக்கிறது, அது மிக சிறப்பான வகையில் வேலை செய்கிறது மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கிறது. இது நீண்ட காலமாக டோலிவுட்டில் இருந்து வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்றாகும். Performance-Wise, படம் மீண்டும், நவீன் பாலிஷெட்டியின் திறமையையும், பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் திறனையும், நிரூபிக்கிறது. படம் முழுவதும் நிறைய Chaos கள் உள்ளன, அது உங்களுக்கு சிந்திக்க போதுமான நேரத்தை விட்டுவைப்பதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடக்கிறது. மூன்று முன்னணி கதாபாத்திரங்கள் நிலைமையை எவ்வாறு கையாளப் போகின்றன என்பது உங்களுக்குத் தெரியாது என்பதால், ஒவ்வொவரு காட்சியும் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது.
Verdict
ஒரு சிறந்த Madcap (Genre) நகைச்சுவை திரைப்படமாக 'ஜாத்தி ரத்னாலு' அமைகிறது. இப்படம் உண்மையில் ஆண்டின் சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்று என கூறலாம். நிச்சயமாக நவீன் பாலிஷெட்டி, பிரியதர்ஷி மற்றும் ராகுல் ராமகிருஷ்ணா ஒரு அசைக்க முடியாத Madcap பொழுதுபோக்கு திரைப்படத்தில் நம்மை திளைக்கவைக்கிறார்கள். கட்டாயம் திரையரங்குகளுக்கு சென்று கண்டு மகிழுங்கள்!

No comments:
Post a Comment